Saturday, 7 March 2009

கரியும் வைரமாகும்

கூழாங்கல் கரியை கண்டது
கர்வத்தில் சிரித்தது
கரி தன்னை பூமியில் புதைத்தது
காலத்தின் கோலம் கரிகட்டையாய் நாம்

பூமிக்குள் புதையும் என் இனம்
யுகங்கள் கழியும்
மண்ணில் புதைந்த மக்களும்
கரியும் வைரம் ஆகும்

இறைமை கரி கட்டையின் பொறுமைக்கு
அதை வைரம் ஆக்கும்
ஆனால் கூழாங்கலே
எங்கள் கால்களில் மிதி படத்தான் போகிறாய்

எம்மை கண்டு எள்ளி நகை ஆடும்
அனைவருக்கும் இது பொருந்தும்

6 comments:

ராம்.CM said...

நான் தான் ப்பஸ்ட்டு...
//எங்கள் கால்களில் மிதி படதான் போகிறாய்
எம்மை கண்டு எள்ளி நகை ஆடும்
அனைவருக்கும் இது பொருந்தும்..///


அருமையான வரிகள்!. அழகாக எழுதியுள்ளீர்கள்...சக்தி.

balaji said...

thanks ram
thangal varugaiku nandri

நட்புடன் ஜமால் said...

\\யுகங்கள் கழியும்
கரியும் வைரம் ஆகும்\\

யதார்த்தமாக ஒரு பெரிய உண்மையை அள்ளி வீசியிருக்கீங்க ...

sakthi said...

nandri jamal thangal varugaikum
varthai thiruthi thanthamaikum

பாலா said...

akka super unmaiyave nalla irukku

sakthi said...

nandri sayrabala