Saturday, 21 February, 2009

தமிழ் இனம்

தமிழ் இனம் நம்பி கெட்ட இனம் !
வந்தாரை வாழ வைத்ததாக பீற்றிக் கொள்கிற இனம் தமிழ் இனம் !

52 ஆண்டுகளாக அன்பையும் அருளையும் சமாதானத்தையும்
நம்புகிற தமிழ் இனத்தை நசுக்கி, வன்முறை கொண்டு ஒடுக்கி,
ஒரு லட்சம் பேரை சாகடித்து இன்னும் அவர்களை நோகடித்து
வரும் சிங்கள பேரினவாத அரசிற்கு காந்தியை போதிக்கிற இந்தியா அரசு
ஆயுத்ங்களை அள்ளி கொடுக்கிறது, தங்களுடைய படைகளை அனுப்பி அங்கு
போரை நடத்துகிறது .

பல லட்சம் தமிழர்கள் வீடு வாசல் துறந்து அகதிகளாக உலகு எல்லாம் சுற்ற வைத்த இலங்கை படைகளுக்கு, பெண்களையும் குழந்தைகளையும் குருதியில் குளிக்க வைத்த இலங்கை அரசுக்கு இந்தியா 500 கோடி ரூபாய் கடனாக குடுத்து உள்ளது.

இந்த பணம் எங்கு இருந்து வந்தது ?
தமிழனின் உழைப்பிலும் வேர்வையிலும் ரத்திலும் குழைத்து எடுத்து குடுக்கிற
வரி பணம் அல்லவா?

ஈழ்ம்தில் இருந்து அகதிகளாக வந்த நம் மக்களை படு கேவலமாக நடத்தி ஆடு மாடுகளை போல அடைத்து வைத்து உள்ள கொடுமையை என்ன வென்று சொல்லுவது .

தமிழ் பெண்கள் இந்த போர்க்காலத்தில் பட்ட துன்பங்களை வரலாற்றில் எந்த இனமும் சந்தித்து இருக்காது.
40 பெண்களை ஒரு முறை சாலையில் கிடத்தி பீரங்கியால் உருட்டி நசுக்கி கொன்றது மறக்க முடியுமா.

செஞ்சோலை என்ற குழந்தைகள் காப்பகத்தில் குண்டு வீசி 61 குழந்தைகளை நொடியில் கருக்கியதே.

இப்பொழுது தினமும் நடை பெரும் வன்முறை வெறி ஆட்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியுமோ ?

2 லட்சம் மக்கள் கிளிநொச்சி யை காலி செய்து விட்டு காடுகளுக்குள் தஞ்சம் புகுந்து மழைக்கும் வெயிலுக்கும் மரங்களுக்கு அருகில் ஒதுங்கி காலத்தை
கடத்தி வருகின்றனர்.

இந்தியா உதவியோடு நாம் மீண்டு விடுவோம் , விடுதலை பெறுவோம் என்று எல்லாம் எண்ணி கொண்டு இருக்கும் ஈழ மக்களுக்கு நாம் அதிர்ச்சி அல்லவா
குடுத்து கொண்டு இருக்கின்றோம் நமது படைகளை அங்கு அனுப்பி

மாண்ட தமிழரின் கனவு பலிக்கட்டும் !
எங்கள் நாடு நாளை பிறக்கட்டும் !!

6 comments:

திகழ்மிளிர் said...

நம்பிக்கை உள்ள இனமும் தான்
ஈழம் என்னும் விடியலைக் காண்போம்

நாட்கள் வேண்டுமென்றால்
நிறைய ஆகலாம்
நிறைவு ஏறும் என்னும்
நம்பிக்கை உள்ளது தோழி

sakthi said...

nandri thigal
erupinum nenju porukuthilai nanba

நட்புடன் ஜமால் said...

\\மாண்ட தமிழரின் கனவு பலிக்கட்டும் !
எங்கள் நாடு நாளை பிறக்கட்டும் !!\\

நாளையாவது ...

ராம்.CM said...

நாட்டையாளும் ராஜாக்களே! அவர்கள் தங்கள் உறவினர்களென்றால் சும்மா இருப்பீர்களா?. உடன்பிற‌ந்தால்தான் உறவா?.. திட்டங்களுக்காக பல்லாயிரக்கணக்கில் கோடிகளை செலவிடும் தாங்கள் இவர்கள் இதிலிருந்து மீள ஏதாவது செய்யக்கூடாதா?...

sakthi said...

பதவிக்கு ஆசைப்படும் பச்சோந்திகள் இருக்கும் வரை
இந்த நிலை தான் ராம்
திராவிடம் இன்று பார்பனர் கையிலும்
படுத்து இருப்பவர் கையிலம் அல்லவா உள்ளது

கனவு பலிக்க வேண்டும் ஜமால்
எனது நாடு நாளை பிறக்கும் என்ற நம்பிக்கையில் தான்
நாங்கள் இருக்கின்றோம் .

VaniSarangam said...

ம்ம் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க