Thursday, 19 August, 2010

திரெட்மில் வாங்கப்போகின்றீர்களா

Stock Image - man on treadmill  smiling at man  and woman running  on treadmills  in gym. fotosearch  - search stock  photos, pictures,  images, and photo  clipart

திரெட்மில் வாங்கப்போகின்றீர்களா.சில விஷயங்களை கவனியுங்கள்

ஏனென்றால் நிறைய பேர் வீட்டில் உடற்பயிற்சி கருவிகளை வாங்கி

சும்மா மூலையில் போட்டு வைத்துஇருக்கின்றார்கள்.

நீங்கள் மலிவான விலையில் வாங்க முயலாதீர்கள் குறைந்தபட்சம் 50000

அளவில் வாங்குவது உசிதம்

Propel Precor போன்ற கம்பெனி திரெட்மில் வாங்குங்கள் ஏனென்றால் நடக்கும்

பெல்ட்டின் அகலம் அதில் சற்றுஅதிகம்.

மலிவான விலை திரெட்மில்லில் நடக்கும் பெல்ட் மிக குறுகலாய் இருக்கும்

சில நிமிடங்களில் அது உங்களுக்கு களைப்பை தரக்கூடும்.

உடற்பயிற்சி கருவிகளை வாங்குவதற்கு முன் அதை எப்படி உபயோகிப்பது

என கற்றுக்கொள்ளுங்கள்.

எடுத்தவுடன் இது போன்ற சாதனங்களில் கண்டிப்பாக அதிவேகமாக ஓடுதல் கூடாது.

முதல் 5 நிமிடங்கள் மெதுவாக நடங்கள். அதற்கு பிறகு கண்டிப்பாக ஸ்டிரெட்ச்

செய்யவேண்டும்.பின்பு மெதுவாக நடக்க ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை

அதிகப்படுத்துங்கள்.ஜாகிங் நல்ல பயனைத்தரக்கூடும்.20 நிமிடங்களுக்கு

பின் படிப்படியாக வேகத்தை குறைத்து மெதுவாக நடந்து கூல் டவுன் செய்வது

நலம்.

திரெட்மில்லில் சரியான முறையில் நடக்காவிட்டால் கண்டிப்பாக

முதுகுவலியை தரும் எனவே

Core Exercise

Abdominal Exercise

போன்றவற்றை இவற்றோடு சேர்ந்து செய்வது மிகவும் நல்லது. இவற்றால்

அழகான வடிவமைப்பு பெறலாம்.

கண்டிப்பாக தேவையற்ற ஊளைசதைகளை குறைத்துவிடும் .

முயன்று பாருங்கள்

எந்த நோயும் வந்தபின் உடல் நலம் காப்பதை விட

வரும் முன் காப்பது சாலச்சிறந்தது

6 comments:

க.பாலாசி said...

என் உடம்புலே சதையே இல்லைங்க...பெறவு எங்கேர்ந்து ஊளைச்சதைவரும்...

தகவல் நன்று...

நட்புடன் ஜமால் said...

50,000க்குஆஆஆஆஆஆஆ

அட்ரஸ் அனுப்பிடறேன் வாங்கி பார்சல் செய்துடுங்க :P

அப்பாவி தங்கமணி said...

நல்ல டிப்ஸ்... நானும் வாங்கி மூலைல தான் போட்டு வெச்சு இருந்தேன்... கொஞ்ச நாள் முன்னாடி செகண்ட்ஸ்ல வித்தாச்சு... ஹும்...

அஹமது இர்ஷாத் said...

useful info..

பழமைபேசி said...

//சும்மா மூலையில் போட்டு வைத்துஇருக்கின்றார்கள்.

நீங்கள் மலிவான விலையில் வாங்க முயலாதீர்கள் குறைந்தபட்சம் 50000

அளவில் வாங்குவது உசிதம்//

இதென்ன கொடுமையா இருக்கு? அல்லாரும் வாங்கி மூலைல போட்டு இருக்காங்கன்னு சொல்றீங்க...

அப்புறம் எதுக்கு வெலை ஒசத்தியா வாங்கணும்?? ஒன்னு, வாங்காதீங்கன்னு சொல்ணும்... அல்லது, கம்மி வெலைக்கு வேணா வாங்கிப் பாவிச்சுப் பாருங்கன்னு சொல்ணும்.... சும்மா, போட்டு வெக்கிறதுக்கு எதுக்கு ஒசத்தி வெலையில வாங்கணும்ங்க??

சித்த சொல்லுங்க... மண்டை வலிக்குது....

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்