Thursday, 6 August, 2009

பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்


”பயமெனும் பேய்தனை அடித்தோம்
பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
என்று வீர முழக்கமிடுகிறார் பாரதி

பயம் சில குடும்பங்களில் தாய் தரும் நோய் என்று சில மன நூலார் கூறுகின்றனர்.

இருட்டில் போகாதே அதைச்செய்யாதே இதைத் தொடாதே என எதற்கெடுத்தாலும் பயந்து தன் குழந்தைக்கு பாலுடன் பயத்தையும் ஊட்டுகிறாள் என்கிறார்கள்.

பணிந்துபோவது நல்லது தான்.
ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.
இப்பொழுது நாம்
அதிகாரத்தை கண்டு அஞ்சுகிறோம்,
ஆணவத்திற்கு தலை பணிகிறோம்.
மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கவும் தயங்குகின்றனர் படித்தவர்கள். பயம் பல நிலைகளில் மக்களிடம் காணப்படுகின்றது.


நமது பணிவு என்ற பண்பு, மறுகோடிக்குச் சென்று மனிதனைக் கோழையாய்,பேடியாய் மாற்றிவிட்டிருப்பதைக் காண முடிகின்றது.பாரதியும் அதை தான் கூறினார். நம்மிடை நைச்சிய மனோபாவம் மிகுந்திருப்பதாக, அடிமைப் புத்தி மலிந்திருப்பதாக.

தன்னம்பிக்கை இழந்து விட்ட ஒரு சமுதாயத்தை, தன்னை தாழ்த்திக் கொண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்தை ,பிறரை இரந்து வாழும் ஒரு மன நிலையை கொண்ட ஒரு மக்கள் சமூகததை நாம் இன்று கொண்டு உள்ளோம்.இந்த நிலை மாற வேண்டும்.

நம்மால் முடியமா??? என்ற சந்தேகம்
நம்மால் முடியாது என்ற
நம்பிக்கையாய் ஊறி
நமது தாழ்வு மனப்பான்மையாய் வெளிவருகின்றது.
நமக்கேற்படும் பயத்தினால்,
நாம் பிறரை சார்ந்து நிற்க விரும்புகின்றோம்.
பிறரிடம் நமது பொறுப்புகளை ஒப்புவிப்பதன் மூலம்
நமது பிரச்னைகளிலிருந்து அவற்றை சமாளிப்பதிலிருந்து தப்பிக்க பார்க்கின்றோம்


கடல் பூராவும் தண்ணீர் இருந்தாலும், கடல் நீர் கப்பலுக்குள் புகாதவரை, கப்பல் அமிழ்ந்து போவது இல்லை. அதேபோல தான் பயமும்.மனம் என்ற கப்பலுக்குள் சஞ்சலம்,பயம்,திகில்,பீதி,சந்தேகம் என்ற ஓட்டைகள் ஏற்படாதவரை இந்த உலகப் பிரச்னைகளும் நம்மை அசைக்க முடியாது.

10 comments:

நட்புடன் ஜமால் said...

நமது பணிவு என்ற பண்பு, மறுகோடிக்குச் சென்று மனிதனைக் கோழையாய்,பேடியாய் மாற்றிவிட்டிருப்பதைக் காண முடிகின்றது]]


நிதர்சணம்.

ஆ.ஞானசேகரன் said...

//கடல் பூராவும் தண்ணீர் இருந்தாலும், கடல் நீர் கப்பலுக்குள் புகாதவரை, கப்பல் அமிழ்ந்து போவது இல்லை. அதேபோல தான் பயமும்.மனம் என்ற கப்பலுக்குள் சஞ்சலம்,பயம்,திகில்,பீதி,சந்தேகம் என்ற ஓட்டைகள் ஏற்படாதவரை இந்த உலகப் பிரச்னைகளும் நம்மை அசைக்க முடியாது.//

உண்மைதான் சக்தி....

பிரியமுடன்.........வசந்த் said...

//தன்னம்பிக்கை இழந்து விட்ட ஒரு சமுதாயத்தை, தன்னை தாழ்த்திக் கொண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்தை ,பிறரை இரந்து வாழும் ஒரு மன நிலையை கொண்ட ஒரு மக்கள் சமூகததை நாம் இன்று கொண்டு உள்ளோம்.இந்த நிலை மாற வேண்டும்.//

அரசியல்வாதிகளும் சாதிவெறி பிடித்தவர்களும் இருக்கும் வரை இந்நிலை மாறாதுக்கா..

Anonymous said...

உண்மை தான் சக்தி..இந்த பயம் தான் நம்மோட சமூக அவலத்துக்கு முதல் காரணமும் எதிரியும் ஆனால் இதற்கும் காரணம் இருக்கில்லையா?

ச.செந்தில்வேலன் said...

//
நம்மால் முடியமா??? என்ற சந்தேகம்
நம்மால் முடியாது என்ற
நம்பிக்கையாய் ஊறி
நமது தாழ்வு மனப்பான்மையாய் வெளிவருகின்றது.
நமக்கேற்படும் பயத்தினால்,
நாம் பிறரை சார்ந்து நிற்க விரும்புகின்றோம்.
//

உண்மையான வார்த்தைகள்! நம் நாட்டில் உள்ள பல சீர்கேட்டிற்கு நம் பயமே முதல் காரணம்!

அருமையான பதிவு சக்தி.

Suresh Kumar said...

கடல் பூராவும் தண்ணீர் இருந்தாலும், கடல் நீர் கப்பலுக்குள் புகாதவரை, கப்பல் அமிழ்ந்து போவது இல்லை. அதேபோல தான் பயமும்.மனம் என்ற கப்பலுக்குள் சஞ்சலம்,பயம்,திகில்,பீதி,சந்தேகம் என்ற ஓட்டைகள் ஏற்படாதவரை இந்த உலகப் பிரச்னைகளும் நம்மை அசைக்க முடியாது /////////////


அருமையான வரிகள்

பாலா said...

கப்பலுக்குள்ள தண்ணீ புகுந்துட்டுன்ன நாங்க வெல்டிங் பனீ அடைச்சுடுவோம்ல

S.A. நவாஸுதீன் said...

கடல் பூராவும் தண்ணீர் இருந்தாலும், கடல் நீர் கப்பலுக்குள் புகாதவரை, கப்பல் அமிழ்ந்து போவது இல்லை. அதேபோல தான் பயமும்.மனம் என்ற கப்பலுக்குள் சஞ்சலம்,பயம்,திகில்,பீதி,சந்தேகம் என்ற ஓட்டைகள் ஏற்படாதவரை இந்த உலகப் பிரச்னைகளும் நம்மை அசைக்க முடியாது.

அருமையா சொல்லி இருக்கே சக்தி.

S.A. நவாஸுதீன் said...

நல்ல பதிவு சக்தி

ஷ‌ஃபிக்ஸ் said...

நல்லா எழுதி இருக்கீங்க சக்தி, பயமும், தயக்கமுமே நாம் செய்யத்துடிக்கும் நல்ல பல செயல்களுக்குத் தடையாக இருக்கின்றது, இவைகளை உடைத்தெறிந்தால் நாம் நிறைய சாதிக்கலாம்.‌