திரெட்மில் வாங்கப்போகின்றீர்களா.சில விஷயங்களை கவனியுங்கள்
ஏனென்றால் நிறைய பேர் வீட்டில் உடற்பயிற்சி கருவிகளை வாங்கி
சும்மா மூலையில் போட்டு வைத்துஇருக்கின்றார்கள்.
நீங்கள் மலிவான விலையில் வாங்க முயலாதீர்கள் குறைந்தபட்சம் 50000
அளவில் வாங்குவது உசிதம்
Propel Precor போன்ற கம்பெனி திரெட்மில் வாங்குங்கள் ஏனென்றால் நடக்கும்
பெல்ட்டின் அகலம் அதில் சற்றுஅதிகம்.
மலிவான விலை திரெட்மில்லில் நடக்கும் பெல்ட் மிக குறுகலாய் இருக்கும்
சில நிமிடங்களில் அது உங்களுக்கு களைப்பை தரக்கூடும்.
உடற்பயிற்சி கருவிகளை வாங்குவதற்கு முன் அதை எப்படி உபயோகிப்பது
என கற்றுக்கொள்ளுங்கள்.
எடுத்தவுடன் இது போன்ற சாதனங்களில் கண்டிப்பாக அதிவேகமாக ஓடுதல் கூடாது.
முதல் 5 நிமிடங்கள் மெதுவாக நடங்கள். அதற்கு பிறகு கண்டிப்பாக ஸ்டிரெட்ச்
செய்யவேண்டும்.பின்பு மெதுவாக நடக்க ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை
அதிகப்படுத்துங்கள்.ஜாகிங் நல்ல பயனைத்தரக்கூடும்.20 நிமிடங்களுக்கு
பின் படிப்படியாக வேகத்தை குறைத்து மெதுவாக நடந்து கூல் டவுன் செய்வது
நலம்.
திரெட்மில்லில் சரியான முறையில் நடக்காவிட்டால் கண்டிப்பாக
முதுகுவலியை தரும் எனவே
Core Exercise
Abdominal Exercise
போன்றவற்றை இவற்றோடு சேர்ந்து செய்வது மிகவும் நல்லது. இவற்றால்
அழகான வடிவமைப்பு பெறலாம்.
கண்டிப்பாக தேவையற்ற ஊளைசதைகளை குறைத்துவிடும் .
முயன்று பாருங்கள்
எந்த நோயும் வந்தபின் உடல் நலம் காப்பதை விட
வரும் முன் காப்பது சாலச்சிறந்தது