
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்
நான் அவளை பார்க்கும்போது, நாணி தலைகுனிந்து நிலத்தை நோக்குவாள். நான் அவளை பார்க்காத சமயத்தில், என்னை பார்த்து மெல்ல புன்முறுவல் செய்வாள்......
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைகொண் டன்னது உடைத்து
நான் பார்தேன் அவளும் எதிர் நோக்கினாள்.அந்த பார்வை தானே துன்புறுத்தவல்ல மோகினி, ஒரு சேனையும் உடன் அழைத்து கொண்டு வந்து தாக்கியதை போலிருந்தது ......
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்
காதலர் இருவருள் ஊடலில் தோற்றுப்போனவர் தான் வென்றார். அது அப்போது அறியப்படாது போனாலும் பின்னர் சேரும்போது தெரியும்.....
ஒரு தலையின் இன்னாது காமம்காய் போல
இருதலை யானும் இனிது
தலைவன் தலைவி இருவருள் ஒருவரின் அன்பினால் மட்டுமே உண்டாகிய காதல் துன்பமயமானது. காவடியின் பாரம் போல் இருபக்கமும் ஒத்த அன்பினால் உண்டாகிய காதலே இனிமையானது......
நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டால்
அஞ்சுதம் வேபாக்கு அறிந்து
என் காதலர் எப்போதும் என் நெஞ்சில் நீங்காது உறைவதால் அவர் மேனி வெந்து விடுமோ என்று சூடானவற்றை சாப்பிடக்கூட அஞ்சுகிறேன்.....
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறை இறவா நின்ற வளை
தலைவனுடைய பிரிவினால் ஏற்பட்ட மெலிவால் என்முன் கையில் இருந்த வளையல்கள் கழன்று வீழ்ந்து விடுவதால், அவர் என்னை பிரிந்த்தை பலரும் அறிந்து என்னை தூற்றாமல் இருப்பார்களோ????
தம்நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்
தன் நெஞ்சம் என்னை வரவிடாமல் தடுத்து காவல் இருக்கும் அவர் என் நெஞ்சத்தில் மட்டும் ஒழியாமல் வருவதற்கு வெட்கப்படமாட்டாரோ???
இம்மை பிறப்பில் பிரியலாம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்
இப்பிறப்பில் உன்னை பிரியமாட்டேன் என்று சொன்னபோது, அப்படியானால் இனிவரும் பிறவியில் மறந்து விடுவேனோ என்று தவறாக உணர்ந்து, மறுமை பிரிவுக்கு அஞ்சிக் கண்களில் நீர்வடிய நீர் நிறைத்து நின்றாள்......
9 comments:
அழகு தொகுப்புகள், தங்கள் விளக்கங்களோடு.
அந்த முதல் குறளை எடுத்து அப்படியே ஒரு கதை போல் செய்யலாமே அல்லது ஒரு கட்டுரை வடிவம் கொடுக்கலாம்
முயலுங்கள் ...
அந்த முதல் குறளை எடுத்து அப்படியே ஒரு கதை போல் செய்யலாமே அல்லது ஒரு கட்டுரை வடிவம் கொடுக்கலாம்
நான் டிரையட்டா ஜமால்
நல்ல முயற்சி. அழகான விளக்கம். வாழ்த்துக்கள் சக்தி
உடம்போடு உயிர்போல தலைவியோடு என் நட்புனு ஒரு குறள் இருக்கு தெரியுமா?
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப்பழம்
இதற்கு நேரான ஒப்புமையை இதுவரை நான் (மட்டும் ) படித்ததில்லை
நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டால்
அஞ்சுதம் வேபாக்கு அறிந்து
என் காதலர் எப்போதும் என் நெஞ்சில் நீங்காது உறைவதால் அவர் மேனி வெந்து விடுமோ என்று சூடானவற்றை சாப்பிடக்கூட அஞ்சுகிறேன் //////////////
நல்ல குரல் நல்ல விளக்கம்
நல்ல தொகுப்புகள் தோழி
குறள் இரு வரிகளில், தங்களின் விளக்கம் மூன்று வரிகளில், நல்ல தொகுப்பு சக்தி.
அருமையான தொகுப்பு அக்கா :))
திருக்குறள் உலக பொதுமறை-னு சும்மாவா சொன்னாங்க... :)))
அனைத்து விஷயங்களும் அதில் உள்ளன
//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//
Post a Comment