
மனித வர்கத்தின் மாபெரும் பேரழிவு
மகிந்தாவின் தலைமையில்
மகிழ்ச்சியோ பலருக்கு
காந்தி தேசமே இவர்களுக்கு
காவல்காரனாய்
வன்னியில் வாழ்வினை இழந்தோர்
வாழ்கையே தீயில் இழந்தோர் இவர்களை
வாயை மூடிக்கொண்டு பார்க்கும்
வக்கற்றோர் நாங்கள்
வேடிக்கை பார்க்கும்
வேங்கைகள் இங்கு எங்கள்
வேதனை தீர்க்குமா
வேதங்கள் நான்கு
தமிழனாய் பிறந்ததுக்கு
தலை இன்றி பலர்
தமிழச்சியின் வயிற்றில்
சூல்கொண்டதால் சிதைக்கப்படும்
எங்கள் கண்மணிகள் சிலர்
போரை நிறுத்துங்கள்
போரை நிறுத்துங்கள்
ஜனிக்கட்டும் தமிழீழ குருத்துக்கள்
ஒட்டாய் அழித்துகொள்ளலாம்
வெற்றி முழக்கமிடும் சிங்களவம் அங்கே
வெறி கிளம்புது எங்களிடம் இங்கே
மனிதமே மனிதம் இற்றுவிட்டதா
இல்லை மனிதப் பற்று விட்டதா
தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???
15 comments:
மனிதமே மனிதம் இற்றுவிட்டதா
இல்லை மனிதப் பற்று விட்டதா
தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???
nalla kelvi
கருத்தை சொல்லும் முன் கண்ணீர் வழிகிறது...கருகி மாண்ட உடல்கள் எல்லாம் கண்ணில் தெரிகிறது...உன் வேட்கையும் இதில் தெரிகிறது..அதில் உள்ள வேதனையும் நன்கு புரிகிறது அவன் கருவில் பிறந்தவனா? இல்லை பல கருக்களை சிதைக்க பிறந்தவனா? இன்று களியாட்டம் போடுகிறான்.. சதாம் உசேனை இன்னும் நாம் மறக்கவில்லை? வினை விதைத்தவன் வினை அற்பான் ஆதங்கம் வேண்டாம் வல்லவனுக்கு வல்லவன் வைய்யகத்தி உண்டு....வல்வினை தீரும் வன்னியின் நிலை விரைவில் மாற்ம்
pathil yaar solvathu ?
ithuthaan ippothaya kelvi
காந்தி தேசமே இதற்கு காவல்காரனாய் ... இதுதான் அனைத்திலும் வெட்கப்பட வேண்டிய வேண்டிய விஷயம்
gayathri said...
மனிதமே மனிதம் இற்றுவிட்டதா
இல்லை மனிதப் பற்று விட்டதா
தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???
nalla kelvi
nandri gaya
வல்வினை தீரும் வன்னியின் நிலை விரைவில் மாற்ம்
maravendum sagothari
sayrabala said...
pathil yaar solvathu ?
ithuthaan ippothaya kelvi
nalla kelvi bala
Sukumar Swaminathan said...
காந்தி தேசமே இதற்கு காவல்காரனாய் ... இதுதான் அனைத்திலும் வெட்கப்பட வேண்டிய வேண்டிய விஷயம்
aam sukumar sir
எப்போது மாறும் உலகம்....
ராம்.CM said...
எப்போது மாறும் உலகம்.
ipothaiku marathu ram anna
sakthi madam romba nallaa ezhuthi irukeenga
///மனிதமே மனிதம் இற்றுவிட்டதா
இல்லை மனிதப் பற்று விட்டதா ///
அவரவர் பற்றுகளுக்காக(பிராந்திய , அரசியல் ,வணிக நலன்கள்) மனிதம் இற்றுப்போனது....
தன் இனத்தைத் தின்னும் மிருகம் நாய் என்று சொல்வார்கள். தன் இனத்தை அழிக்கத் துணை போகிறவர்களை என்னென்பது? தினம் கூனிக் குறுகிப் போகிறது. கண்ணீர் வராத நாளில்லை.
//வேடிக்கை பார்க்கும்
வேங்கைகள் இங்கு எங்கள்
வேதனை தீர்க்குமா
வேதங்கள் நான்கு//
வேதனைகள் தீரவேண்டும்
மேடம் இன்னும் நிறைய எழுதுங்க
Post a Comment