Monday, 3 August 2009

தேடல்.....


சங்கரன் பிள்ளை ஒரு முறை சந்நியாசம் மேற்கொண்டு ஆன்மீகப்பாதையில் போக விரும்பினார்.

அந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற முறையாக ,கோரக்நாத் முறையிருந்தது.எனவே கோரக்நாத் முறையை சேர்ந்தவர்களிடம் சென்று
சந்நியாசம் கேட்டார் சங்கரன் பிள்ளை. அவர்கள் ஒப்புக்கொண்டு அவர் தலையை மொட்டையடித்தார்கள்.

பொதுவாகவே கோரக்நாத் வகையை சேர்ந்தவர்கள் தங்கள் காதுகளில் கண்ணாடி அல்லது தந்தத்தால் ஆன ஒரு வளையலை அணிந்திருப்பார்கள்.எனவே சங்கரன் பிள்ளை காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு,வளையலை மாட்டி மொட்டையடித்து,காவி நிற ஆடையை அணிவித்தார்கள்.அங்கே ஒரு மாதமிருந்தார்.அவருக்கு மன நிறைவு கிடைக்கவில்லை.எனவே மறு படியும் தேடுதலை தொடங்கினார்.

அவர் மிகவும் தீவிரமாக தேடிக்கொண்டிருந்த போது, ஒரு காட்டுக்குள் போனார். அங்கே ஒரு இஸ்லாமியத் துறவியை சந்தித்தார்.தீட்சை கேட்டார்.அவர் காவியை கழற்றிவிட்டு ஒரு பச்சை ஆடையைத்தந்து அணியச்சொல்லி அவர்கள் மதவழக்கப்படி அறுவைசிகிச்சை செய்ய சொன்னார்.அதுவும் நடந்தது. நீண்ட காலம் அந்தக் காயம் சங்கரன் பிள்ளைக்கு ஆறவில்லை . ஏனென்றால் அதை ஒரு மருத்துவர் செய்யவில்லை. காட்டுப்பகுதி வேறு எனவே அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அதைச் செய்திருந்தார்கள் .

அந்த துறவி மொட்டையடிக்கப்பட்ட தலை கூடாதென்றும், முடி வளரவேண்டும் என்றும் சொன்னார்.தலைமுடி மட்டுமல்ல,தாடியும் வளரவேண்டும் என்று சொன்னார் எனவே சங்கரன் பிள்ளை அதை வளர்க்க துவங்கினார்.அங்கே ஒரு மாதம் இருந்தார்.அவருக்கு மன நிறைவு வரவில்லை.

அதையும் விட்டு விட்டு கன்பத் என்கிற துறவு முறைக்கு சென்றார்.மிகவும் புகழ்பெற்ற ஒருமுறை .கோரக் நாத் வகையை சேர்ந்தவர்கள் வலது காதில் ஒரு வளையலை அணிவது போல கன்பத் இனத்தை சேர்ந்தவர்கள் இடது காதில் அணிவது வழக்கம். எனவே இப்போது இடது காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு அதில் ஒரு பெரிய வளையலையும் மாட்டி விட்டார்கள்.

இப்படியே தொடர்கின்றது .உங்களுக்கு புரியும் . இது எங்கே போகும் என்று ???

ஒரு மனிதர் உண்மையான தேடுதலில் இருந்திருந்தால் இது அவனுக்கு நடந்திருக்காது .அவர் எதையும் தேடிப்போக வேண்டியதில்லை, அது உங்களை தேடி வரும்......

நாமும் சங்கரன் பிள்ளையை போலத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம்.......
என்ன தேடுகின்றோம் என நாமே அறியாது .....

16 comments:

ஆ.ஞானசேகரன் said...

//நாமும் சங்கரன் பிள்ளையை போலத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம்.......
என்ன தேடுகின்றோம் என நாமே அறியாது //

உண்மைதான் சக்தி..

நல்ல கதை நல்ல கருத்து

அ.மு.செய்யது said...

தேடல் என்ற ஒற்றை சொல்லில் தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது.

நல்ல தொடக்கம் சக்தி !!! வாழ்த்துக்கள் ..நன்றி பகிர்வுக்கு !

Radhakrishnan said...

நல்லதொரு பதிவு. மிகவும் அருமையாக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மிக்க நன்றி.

Arasi Raj said...

vanthutten...vanthutten...ingana vanthutten....kalakki podunga..sakthiyin marupakkam

Suresh Kumar said...

அவர் எதையும் தேடிப்போக வேண்டியதில்லை, அது உங்களை தேடி வரும்....../////////////////////////

வருவதை கைவிடாமல் பார்த்து கொண்டால் போதும் .

நல்ல கருத்துக்கள்

நட்புடன் ஜமால் said...

உண்மை தான்


தேடல் - எதை பற்றியது என்பதை முதலில் உணருதுலே அதன் சரியான பாதையில் நம்மை அழைத்து செல்லும்

Anbu said...

நல்ல கருத்துள்ள கதை அக்கா...

idhyam said...

ஈசா அன்பருக்கு நன்றி!

கீழ்கண்ட பதிலை பார்க்கவும்

http://idhyamonline.blogspot.com/2009/07/blog-post_10.html

SUFFIX said...

அமைதியை தேடி எங்கும் அலையத் தேவையில்லை, அது நமக்குள்ளேயே இருக்கின்றது. நல்ல சிந்தனை நல்வழிக்கு இட்டுச் செல்லும். அமைதிக்கு சிறந்த வழி தனது சக மனிதர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதிலும், அவர்களுக்கு உதவி செய்வதிலுமே இருக்கிறது, இதுவும் ஆன்மீகத்தில் ஒரு அங்கம் தான். அதற்க்கு ஒரு உடை, நிறம், தோற்றம் ஒரு பொருட்டே அல்ல. இந்த தோற்றத்தை வைத்தே பலர் ஏமாற்றுகிறார்கள்.

Anonymous said...

தங்கச்சி நான் நாளு நாள் ஊரில் இல்லை அதுக்குள்ள எதை தேடிப் போய் இப்படி ஆயிட்டம்மா.....

சரி... புது முயற்சி..

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்.... தேடல் நல்லது தானே.....

S.A. நவாஸுதீன் said...

நாம் தேடுவது நம்மை தேடிவர, நம் எண்ணமும் செயலும் அமைய நல்ல மதிப்பீட்டுடன் நம் முயற்சிகளின் பாதை இருக்குமானால் தேடும் பொருளின் பால் தேடல் பணியை விட்டு விடலாம். இல்லையேல் பாதை கால்களின் கீழே நழுவிக்கொண்டிருக்க நாம் அதே இடத்தில் தான் இறுதிவரை நின்று கொண்டிருப்போம், தேடியது நமக்கு முன்னாலா இல்லை பின்னாலா என்றறியாது.

பாலா said...

நானும் தேடுறேன்

SUBBU said...

தேடி தேடி தேடி தீர்ப்போமா :)))))

SUBBU said...

கடைசியா அந்த காயம் ஆறிடுச்சா இல்லயா சங்கரன் பிள்ளைக்கி :((((((((

*இயற்கை ராஜி* said...

nalla kathai akka.. arumaiyana karuthukaludan

Sakthi said...

இன்னொரு சக்தி இங்கே..!