
ஜென் என்கிற சொல், சம்ஸ்கிருத சொல்லாகிய தியான் என்கிற சொல்லில் இருந்து வருகிறது.
கெளதமபுத்தர் தியானம் சொல்லித்தந்தார்.போதிதர்மா சீன நாட்டுக்கு தியானத்தை சொண்டு சேர்த்தார்.அது அங்கே சீயான் என்று ஆனது.
இந்த சீயான் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற போது ஜென் என்று ஆனது. ஜென் என்பது வேதங்கள் இல்லாத, விதிமுறைகள் இல்லாத,குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை. அது வரையறுக்கப்படாத பாதை. அது யோகாவிலிருந்து வேறுபட்டதல்ல அது தான் யோகா.

ஜென் மார்க்கத்தில் ஹீயூட்டி என்று ஒருவர் இருந்தார். அவர் யாருக்கும் ஜென் போதித்ததில்லை .ஆனால் குருமாராக அறியப்பட்டார். எல்லோரும் அவரை குரு என்று மதித்தார்கள்.
ஆனால் அவர் எந்த போதனைகளையும் தந்ததில்லை. தோள்களில் ஒரு பெரிய பையை அவர் சுமந்து கொண்டு செல்வார்.அதில் பெரும்பான்மையானவை இனிப்புகளாக இருக்கும். அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்ளுவர். அவர் இனிப்புகளை வினியோகிப்பார் பிறகு சென்றுவிடுவார். அவ்வளவு தான் .
மக்கள் அவரிடம் வந்து போத்னைகளை கேட்பார்கள். அவர் சிரித்து விட்டு சென்று விடுவார்....
இன்னொரு குரு என்பனின் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஹீயூட்டியை சந்திக்க வருகிறார். அவர் ஹீயூட்டி உண்மையாகவே ஜென் மார்க்கத்தில் இருக்கிறாரா??? இல்லையா ?? என்பதை தெரிந்து கொள்ள வந்தார்.
அவரிடம் ஜென் என்றால் என்ன??? என்றார். உடனே ஹீயூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அவர் அடுத்து ஜென்னின் நோக்கம் என்னவென்றார்??? ஹீயூட்டி அந்த சாக்கை எடுத்து தன் தோள்களில் போட்டுக்கொண்டு நகர்ந்து விட்டார்.
இது தான் யோகா என்பது எனவே நீங்கள் யோகாவையோ ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால் உங்களிடம் இருக்கிற சுமையை கீழே போட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுதந்திரமாக நேராக நிற்கவேண்டும். இது தான் முக்கியம்.சில சமயம் சுமையோடும் அதை செய்ய முடியும். அது மிக மிக அரிது . லட்சத்தில் ஒருவரால் அது முடியும். எனவே சுமையை கீழே போடுங்கள்.