Saturday, 21 February 2009

தமிழ் இனம்

தமிழ் இனம் நம்பி கெட்ட இனம் !
வந்தாரை வாழ வைத்ததாக பீற்றிக் கொள்கிற இனம் தமிழ் இனம் !

52 ஆண்டுகளாக அன்பையும் அருளையும் சமாதானத்தையும்
நம்புகிற தமிழ் இனத்தை நசுக்கி, வன்முறை கொண்டு ஒடுக்கி,
ஒரு லட்சம் பேரை சாகடித்து இன்னும் அவர்களை நோகடித்து
வரும் சிங்கள பேரினவாத அரசிற்கு காந்தியை போதிக்கிற இந்தியா அரசு
ஆயுத்ங்களை அள்ளி கொடுக்கிறது, தங்களுடைய படைகளை அனுப்பி அங்கு
போரை நடத்துகிறது .

பல லட்சம் தமிழர்கள் வீடு வாசல் துறந்து அகதிகளாக உலகு எல்லாம் சுற்ற வைத்த இலங்கை படைகளுக்கு, பெண்களையும் குழந்தைகளையும் குருதியில் குளிக்க வைத்த இலங்கை அரசுக்கு இந்தியா 500 கோடி ரூபாய் கடனாக குடுத்து உள்ளது.

இந்த பணம் எங்கு இருந்து வந்தது ?
தமிழனின் உழைப்பிலும் வேர்வையிலும் ரத்திலும் குழைத்து எடுத்து குடுக்கிற
வரி பணம் அல்லவா?

ஈழ்ம்தில் இருந்து அகதிகளாக வந்த நம் மக்களை படு கேவலமாக நடத்தி ஆடு மாடுகளை போல அடைத்து வைத்து உள்ள கொடுமையை என்ன வென்று சொல்லுவது .

தமிழ் பெண்கள் இந்த போர்க்காலத்தில் பட்ட துன்பங்களை வரலாற்றில் எந்த இனமும் சந்தித்து இருக்காது.
40 பெண்களை ஒரு முறை சாலையில் கிடத்தி பீரங்கியால் உருட்டி நசுக்கி கொன்றது மறக்க முடியுமா.

செஞ்சோலை என்ற குழந்தைகள் காப்பகத்தில் குண்டு வீசி 61 குழந்தைகளை நொடியில் கருக்கியதே.

இப்பொழுது தினமும் நடை பெரும் வன்முறை வெறி ஆட்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியுமோ ?

2 லட்சம் மக்கள் கிளிநொச்சி யை காலி செய்து விட்டு காடுகளுக்குள் தஞ்சம் புகுந்து மழைக்கும் வெயிலுக்கும் மரங்களுக்கு அருகில் ஒதுங்கி காலத்தை
கடத்தி வருகின்றனர்.

இந்தியா உதவியோடு நாம் மீண்டு விடுவோம் , விடுதலை பெறுவோம் என்று எல்லாம் எண்ணி கொண்டு இருக்கும் ஈழ மக்களுக்கு நாம் அதிர்ச்சி அல்லவா
குடுத்து கொண்டு இருக்கின்றோம் நமது படைகளை அங்கு அனுப்பி

மாண்ட தமிழரின் கனவு பலிக்கட்டும் !
எங்கள் நாடு நாளை பிறக்கட்டும் !!

Saturday, 14 February 2009

சோனியாகாந்தி

தங்களை பற்றி மிக்க பெருமையுடன் இருந்தோம்
ஒரு பெண் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில்
இருப்பதை கண்டு
ஆனால் நீங்கள் இன்று இத்தனை தமிழர்கள்
கொல்லபடுவதை வேடிக்கை பார்த்து கொண்டு
அமைதி காப்பது சரியா ?????
இதற்கு தானா உங்களை தேர்ந்து எடுத்தோம் அம்மையாரே ?
இதற்கு இந்தியா உதவி செய்வது உங்கள் அனுமதியோடு
என்பது அனைவருக்கும் தெரியும்.
அங்கு இறப்பது புலிகள் மட்டும் அல்ல கிளிகளும்
எங்கள் இனத்தின் சின்ன சின்ன கிளிகள் அம்மா
முத்துகுமரனோடு முடியவில்லை உயிர் தீ இன் வேள்வி
தொடரும்மா இந்த சோகம் ?????
உங்கள் அனுமதியோடு
முற்று புள்ளி வைக்க வேண்டுகிறோம்....

Wednesday, 31 December 2008

புதிதாக வருடம் பிறந்துவிட்டது
ஆனால் என்று எங்கள் ஈழத்தில்
புது விடியல் பிறக்கும்
எங்கள் உடன் பிறப்புகள்
என்று இனிய புது விடியல்
காண்பார்கள்.
என்று அரசியல்வாதிகள் எங்கள் மக்களின்
உரிமைக்காக மட்டும்
உண்மையாக போராடுவார்கள்.
சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்
தோற்றால் கூட் வருந்தும்
மக்களே
அங்கு தோற்பது
எதிர்பார்ப்புகள் மட்டும் அல்ல
உயிர்கள். நமது சகோதர சகோதரிகள்
உயிர்கள்
அவர்களும் பாத்து மாதம் சுமந்து தானே பெற்றார்கள்
அங்கு பிறக்கும் உயிர்களுக்கு
மட்டும் மதீபபுஇல்லையா
என்று பிறக்கும் அங்கு ஒரு புதிய விடியல்
அன்றே தமிழர்க்கு
புது வருடம்
புது வருடம் மட்டும் அல்ல புதிய சகாப்தம்
காத்திருப்போம் இதவும் கடக்கும்
இனிமை பிறக்கும்
அவர்கள் வாழ்வில் ஒளிபிறக்கும் இந்த புது வருடத்தில்
என்ற நம்பிகையோடு